Post

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை





வரலாற்று சிறப்புமிக்க ஒரு
விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான
  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.





மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல்இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டுநிற்கின்றனர்.





பொதுவாககிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும்பிறரது
கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில்அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம்
உடையவர்களல்லர். தாங்கள் உண்டு
தங்கள்
மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.





ஆனால்இந்த SAN அமைப்பினரும்அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்பிற மதங்களைஅதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக
விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர்
 நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparative study) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துசாகிர்
நாயக்கை வீழ்த்த வேண்டும்
அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparative study செய்துள்ளோம்இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.





சாகிர் நாயகின் அமைப்பின்
பிரிவுகளில் ஒன்றான
 IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.





இந்த வகையில்தாங்கள் தான் சரியான கொள்கையைகொண்டுள்ளோம் என்றும்இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர்.


கேரளா மாநிலத்தில்அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும்
இவர்கள்
கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை
நிகழ்த்தியுள்ளது
,குறிப்பிடத்தக்கது.





இந்த நிலையில் தான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.





எது இறை வேதம் என்கிற
தலைப்பில் முதலில் விவாதிப்பது
 என்று,இவர்கள்
இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவுஎடுக்கப்பட்டது. எது இறை வேதம்
 , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே
தலைப்பாக
 வைக்காமல்இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.





அந்த அடிப்படையில்பைபிள் இறை வேதமா இல்லையாஎன்கிற
தலைப்பில் கடந்த
 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும்குர்ஆன் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.





இது தவிரஇன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும்
முடிவு
 செய்யப்பட்டிருக்கிறது.





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில்தவ்ஹீத்
ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த
 விதி புதிய ஒன்று என்றாலும்சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிறநோக்கில்ஆங்கில
புலமை அதிகம் பெற்றிராத
 தவ்ஹீத் ஜமாத்தினர்,அதற்கும் தயாரானார்கள்.





விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும்
புரியக்கூடிய ஒரு அடிப்படையான
 விஷயம் -
இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால்
அதில்
முஸ்லிம்கள்
 கேள்வி கேட்ககூடியவர்களாகவும்கிறிஸ்தவர்கள்
பதில்சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.





என்ன காரணத்தால் பைபிளை இறை
வேதம்
 என்று சொல்கிறீர்கள்?


மனித கையாடல் பலபைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமேஇவைகளுக்கு
என்ன பதில்
?


இவையெல்லாம் கடவுள்
வார்த்தையாக இருக்க முடியுமா
?





என்றெல்லாம் முஸ்லிம்கள்
கேட்கின்ற
 கேள்விகளுக்கு பதில் சொல்லிபைபிளை இறை
வேதம் தான் என்று நிலைநாட்ட
 வேண்டிய
கடமை
  கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம்
ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.





ஆனால்இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தேகிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானதுமுஸ்லிம்களை
மட்டுமல்லாது
அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும்,
அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.





ஏனெனில்இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில்துவக்கம்
முதல் இறுதி அமர்வு வரை
இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!





ஒரே ஒரு காரணத்தை கூட
சொல்லாமல்
இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பதுதங்கள்
பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று
 யாரை நம்பி
அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ
அவர்கள்
அனைவரையும் மிகுந்த
 ஏமாற்றமடைய செய்தது என்பதற்குஇரண்டாம்
நாளில் அவர்கள் அணியில் காலியாகிவிட்ட
 கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!





சரிபைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து
விட்டு
பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல்,இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையாஅந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.





எப்படி? தவ்ஹீத்
ஜமாஅத் தரப்பில்
,பைபிளில் இன்னின்ன வசனங்களில்அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும்
சொல்லப்பட்டிருக்கின்றனவே
, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே
எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே
,  நீங்கள்
என்னவென்றால்
இதைஇறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களேஉங்கள்
இறைவன் இவ்வளவு மட்டரகமா
என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.





இவைகளுக்கு முறையான
பதில்களை சொல்லி
இந்த வசனத்தில்நீங்கள் சொல்வது போல இல்லை என்றோஅல்லது இந்த
வசனம் இப்படி தான்
 சொல்கிறதுஅதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி,தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல்உங்கள் குர்
ஆனிலும்
 தானே விந்து என்கிற வார்த்தை உள்ளதுஉங்கள் குர்
ஆனிலும் தான் விபச்சாரம்
 பற்றி சொல்லப்பட்டிருக்கிறதுஹதீஸிலும்
தானே இப்படி உள்ளது என்று சிறு
 பிள்ளை
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.





அடப்பாவிகளா! உங்கள்
பைபிளில்
காம களியாட்டங்கள்பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள்,அண்ணன்-தங்கை
தகாத உறவு
கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால்அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறதுஅதிலும்
தானேவிபச்சாரம்
 குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களேவிந்து
வந்தால்
 குளிப்பது கடமைவிந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள்விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமாஇப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?





இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன்குர்ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு
வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளதுஎன்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை
வண்டவாளங்கள் இருக்கின்றன
 என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குபதிலை சொல்லாமல்குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர்இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான்குர்ஆன் இறைவேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதுஅந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள்இப்போது
பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று
 ஒரே
முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.





இருப்பினும்ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபுவேலை செய்துவார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போதுவெகுண்டெழுந்த சகோ. பிஜேஇதற்குரிய
மூல ஆதாரங்களை தர வேண்டும்
இல்லையேல்பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.





ஹதீஸ் என்று எதை சொன்னாலும்
நம்பி விடுவார்கள் என்றுதப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம்
மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர்சுதாரித்துநாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.





அந்த ஆதாரமாவது உண்மையா
என்று பார்த்தல் இல்லை.
 விடாமல்,சகோ. பிஜேஅது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில்இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.





பின்னர்இல்லைநாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepjதளத்திலும்
அவ்வாறு
 இல்லைதற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாதுஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது
கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி
இந்த
விஷயத்தை முடிவுக்கு கொண்டு
 வந்தார்
சகோ. பிஜே.





அடுத்துபைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற
பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள்
அதை
செய்யாமல்
,உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே,இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதேஅவை
அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு
 (ஜீசுஸ்)
கொடுத்ததாக சொல்கிறானே
,அப்படியானால்இந்த கால பைபிளில் மனித கையாடல்
உள்ளது என்று சொல்வது
அல்லாஹ்தவ்ராத்தையும் இன்ஜீலையும்பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி
வைத்தனர்.





ஆனால்இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும்சரியில்லை ! பைபிள் இறை வேதம்
தான் என்பதை
 பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள்அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.


மேலும்குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும்இன்ஜீலுக்கும் இன்று உங்கள்
கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்தசம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.





இது உங்கள் சுயக்கருத்துஇதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கிஎந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோஅதே குர் ஆனில் தான்ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான
சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார்.





ஈசா நபிக்கு வழங்கப்பட்ட
அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை
 அல்லாஹ்
குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை
 வாசித்தார் சகோ. பிஜே.





இந்த வசனம்நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால்அந்த கால
தவ்ராத்
இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.





இதை சற்றும்
எதிர்ப்பார்க்காத பாதிரிகள்
மீண்டும் தலைப்பை திசை திருப்பிசகோபிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு,இது தவறு
என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.





முதல் நாளின் இறுதி அமர்வில்,  சகோ. அப்பாஸ் அலியும்சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில்
உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட
மற்றொரு
பக்கம்
சகோ. கலீல் ரசூல் அவர்கள்,பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தனஒவ்வொருநூற்றாண்டுகளிலும்
அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன
எத்தனை
எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம்
 தக்க
ஆதாரங்களுடனும்
மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.





ஏற்கனவே இந்த பாதிரிகள்
எதிர்க்கொண்ட விவாதங்களில்இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால்
தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை
கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது
விவாதத்தை
கண்டு வந்த
 அனைவருக்கும் புரிய துவங்கியது .





எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன்இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும்உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற
நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான்
வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.





சரிமறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா?அப்படியானால்அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு
மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர்.அதற்கும் பதில்
இல்லை!





உங்கள் சுய சிந்தனையை
உபயோகித்து தான் எங்கள்
 கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த
பட்சம்
வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர
வேண்டியது தானே
?அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள்?, உங்களிடம்
மறுப்பு இல்லை! எந்த
 முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோஅந்த நூலில்நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமேஅந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த
குற்றச்சாட்டுகளுக்குஉங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை
என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர்
தவ்ஹீத் ஜமாத்தினர்.





இரண்டாம் நாளின் இறுதியில்சரிபைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்றுநிரூபிக்கவில்லைநானே same side
goal 
போட்டுஉங்களுக்குபாயின்ட்  எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.





என்ன வித்தியாசமாக
சொல்கிறாரே என்று
 பார்த்தால்,





பைபிளில்எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ,அவர் பூ
என்று ஊதினால்
 மலை பறந்து விடும்கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார்கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்து கொள்வார்என்றுசொல்லப்பட்டிருக்கிறது.


இங்கு வந்திருக்கிற
அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும்.
 எனக்கு
மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர்
 வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள்நான் பைபிளை
இறை வேதம் என்று
 ஒப்புக்கொள்கிறேன் என்றார்.





அதோடு நிறுத்திக்கொள்ளாமல்கையோடு ஒரு விஷ பாட்டில்ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜேஇதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.





இந்நேரம் வயிற்ரை
கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில்எடுத்து குடித்தாலும் குடித்து
விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம்.
 ஆனால்அவர்கள் வழக்கம் போலஉங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும்நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோஇந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து
இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டுகாட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.





இதை ஏற்கனவே எதிர்பார்த்த
தவ்ஹீத்
 ஜமாத்தினர்நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோஅது ஹதீஸ்
அல்ல
அது பொய்,கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள்அக்கு வேறு ஆணி  வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரிஇது தான் உங்கள் வாதம் என்றால்நாங்கள்
எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ
அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள்பிரச்சனை
இல்லை என்றனர் !





இதற்கு பதில் சொன்னவர்கள்பைபிளில்இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று
சொல்லப்பட்டுள்ளது
ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.





விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜேஇயேசுவை
நாங்கள் பரீட்சிக்கவில்லை
உங்களை தான் பரீட்சிக்கிறோம்இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.


அதோடுஎந்த பைபிள் வசனத்தில்இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோஅதே வசனத்தின் கடைசியில்,இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறதுஎன்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.


அதாவதுஎன்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டேஅந்த
பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று
எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும்பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.





வெலெவெலெத்துப் போன  பாதிரிகூட்டம்செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜேதலைப்பை
நிலைநாட்ட வேண்டி ஒரே
 ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒருவிஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.





பைபிளில் உள்ள ஆபாசங்கள்
என்றும்
 முரண்பாடுகள்பொய்கள்,கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம்,அவைகளுக்கெல்லாம்
பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும்தானே இப்படி உள்ளது
ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களேகுர் ஆன் குறித்தோஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த
வாரம் வாருங்கள்
இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.





ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்குமுழுமையான வெற்றியை
நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!!


நன்றி: சகோதரர். நாஷித் அஹமத்