Post

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 06-04-2012





அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 06-04-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.




இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. முஹம்மது அவர்கள் "கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.








இதில் சகோதரர் அவர்கள் நாம் எங்கிருந்த போதிலும் நம்மை அல்லாஹ்வின் பார்வை நம்மை விட்டு விலகுவதில்லை. நாம் செய்கின்ற எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் ஏடுகளில் எழுத்ப்படாமல் இல்லை என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து மிகத் தெளிவாக விளக்கினார்கள்.





இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


Post

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்








பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.


இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)


கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.


2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).


பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .


ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.


இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.


கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.


ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.


பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.


அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்


பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …


பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.


(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).


டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)


கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்


ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்


இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை


இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)


கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,


சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.


S.சித்தீக்.M.Tech


Post

மோடியின் அரசாங்கம் ஒழுங்காக நடைபெறவில்லை:










அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தட்ஸ் தமிழ்-


Post

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (30-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.







இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், "சொற்பொழிவும் நாமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.








இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



Post

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-03-2012







அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (30-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.









இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், "உறுதியான ஈமானுக்கு என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.












இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



Post

வாராந்திர நிகழ்ச்சி - 30-03-2012







அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (30-03-2012) நடைபெற்றது.








இந்த நிகழ்ச்சியில்சகோ.அப்துல் ஹமீது அவர்கள், "இஸ்லாமும் இன்றைய முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.









இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!



Post

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்







இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்குமாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.




அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப்பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் அமைந்துள்ளதால் அறிவுடைய மக்கள் யாரும் இது போன்ற கிறுக்குத்தனங்களை ஆதரிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் இது போன்ற தீர்மான்ங்களை சிந்தனையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பட்தை முதலில் நாம்தெளிவுபடுத்துகிறோம்.



நாட்டில் உள்ள ஊடகங்களும்தமிழக மக்களை உசுப்பேற்றி வந்த தமிழினத் தலைவர்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்?இலங்கை அதிபர் ராஜ்பக்சே போர்க்குற்றம் செய்திருக்கிறார். நிராயுதபாணிகளைக் கொன்று குவித்துள்ளார். சரணடைய வந்ததமிழர்களை ஏமாற்றி சுட்டுத் தள்ளி இருக்கிறார். சிறுவர்களையும் பெண்களையும் கூட கொன்று குவித்துள்ளார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றம் செய்ததற்காக மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதுபோலவும் அந்த நேரம் நெருங்கி விட்டது போலவும் படம் காட்டினார்கள்.



திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்டிய கோரக்காட்சிகளும் அதற்கு நியாயம் கிடைக்க உள்ளது என்ற பிரச்சாரமும் எந்த அளவுக்கு இருந்தன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்ன என்பதை அறியாமலே இவர்களே தீர்மானத்தைத் தயாரித்தவர்கள் போல வீறாப்பு காட்டினார்கள். ஆனால் ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தில் இவர்கள் சொன்னது போல் ஒன்றுமே இல்லை.


தீர்மானத்தின் விவரம்:



2009 மே மாதத்தில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில்போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கைபோரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் போன்றவற்றுக்கு இலங்கை அரசுக்கு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு நியமித்ததெரிய வந்த பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு கமிஷன்(எல்.எல்.ஆர்.சி.)’ அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால்,எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமனித உரிமை மீறல்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுடன்விவாதித்துஉரிய ஆலோசனைகளை ஐ.நா. கவுன்சில் அளிக்க வேண்டும்.



இது தான் தீர்மான வாசகம்



அதாவது இலங்கை அரசு நியமித்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லையாம். அதை நிறைவேற்ற வேண்டுமாம். இது தான் தீர்மானத்தின்சாராம்சம்.



இதன் மூலம் இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சில நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் இவர்கள் விழுந்து விழுந்து படம் காட்டியதற்கு ஒரு தீர்வையும் காணோம். போர்க்குற்றவாளியை ஐநா பாதுகாப்புப் படை பிடித்து வந்துதூக்கில் போடப்போவது போல் என்னமோ நடக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பூ இவ்வளவு தானாஇதற்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்?



எந்தக் கொடுங்கோல் அரசாக இருந்தாலும் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து விட்டு எஞ்சி இருப்பவர்களுக்கு சில வசதிகளைச் செய்து கொடுப்பது எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடிய ஒன்று தான். இந்தத் தீர்மானம் இல்லாவிட்டாலும் இதைச் செய்வதற்கு இலங்கைக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோவேலை வாய்ப்பு கொடுப்பதோ ராஜபக்சேவுக்குச் சிரமமானதல்ல. சொல்லப் போனால் நாட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்க இது அவருக்கு உதவவே செய்யும்.



தீர்மானம் என்ற பெயரில் உலக மக்கள் அனைவரையும் எல்லா அரசுகளும் ஏமாற்றியுள்ளன. அவர்களை மன்னிக்கலாம். ஆனால் தமிழர்களின் காவலர்களாக வேடம் போடும் தமிழ்த் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை பார்த்த பிறகாவது அமெரிக்காவும் மற்றநாடுகளும் சேர்ந்து அயோக்கியத்தனம் செய்துள்ளன என்று கொந்தளிக்க வேண்டுமல்லவாஆனால் என்னால் தான் இந்த வெற்றி என்று கருனாநிதியும் ஜெயலலிதாவும் மற்ற அனைத்து தமிழ்ச் சமுதாயக் காவலர்களும் கூறி தமிழக மக்களைஏமாற்றுகின்றனர். ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் அமெரிக்கக் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். அல்லது அடி முட்டாள்களாக இருக்க வேண்டும்.



பயனற்ற ஒரு விஷயத்துக்காக உலகமே சேர்ந்து குரல் கொடுத்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வழியில் செல்லாது.



அடுத்ததாக ராஜ பக்சே போர்க்குற்றம் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் ராஜபக்சே சந்தித்த நிலையை எந்த நாடு சந்தித்தாலும் அந்த நாடுகள் ராஜபக்சே போல் தான் செயல்படும். தனது நாட்டில் தலைவலியைக் கொடுத்துக் கொண்டு ஆயுதம் தாங்கிப் போராடுவோரை அழிக்க இது போன்ற வழிமுறைகளைத் தான் கையாள்வார்கள். சில நாடுகள் இது போல் செய்யவில்லை என்றால் அவர்கள் ராஜ்பக்சே சந்தித்தது போன்ற நிலையைச் சந்தித்தது இல்லை. அந்த வாய்ப்பு இல்லாததால் தான் சில நாடுகள் போர்க்குற்றம் செய்யவில்லையே தவிர மற்ற எல்லா நாடுகளுமே போர்க்குற்றவாளிகள் தான்.



ஜப்பானில் சரணடைந்த மக்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அப்பாவிகளைக் கொன்றதற்கு நிகரான ஒரு போர்க்குற்றம் உலகில் நடந்தது இல்லை. வியட்நாம்கவுதமாலா,ஆப்கானிஸ்தான்ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்க மிருகங்கள் நடத்திய போர்க் குற்றத்தில் இலட்சத்தில் ஒரு பங்காகக் கூட ராஜபக்சேயின் போர்க் குற்றம் இருக்கவில்லை.



ஏன் நமது நாட்டிலும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டிருப்பதும் ராஜ்பக்சே செய்தது போன்ற குற்றம் தான். தமிழகத்தில் நக்ஸலைட்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தேவாரம் என்ற அதிகாரி தலைமையில் நடந்த வேட்டைகளும் இந்த வகையானது தான். வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி கிராம மக்களைக் கொன்று புதைத்ததும்,சித்திரவதை செய்ததும் இந்த வகையானது தான். ஏன் சமீபத்தில் நடந்த என்கவுண்டர்களும் கூட இந்த வகையானது தான். இவை அனைத்துமே சட்டப்படி செய்யக் கூடாத காரியங்கள் தான். இலங்கை அரசு செய்ததும் இது போன்றது தான்.



 இதனால் தான் எந்த நாடும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வருவதுமில்லை. ஆதரிப்பதும் இல்லை. நாளை நமக்கு எதிராகவும் இது போன்ற தீர்மானங்கள் வந்து விடுமே என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.



இதன் காரணமாகவும் நாம் இதை ஆதரிக்க முடியாது. போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டு வந்தால் ராஜ்பக்சே போல் செயல்பட்ட ஜார்ஜ் புஷ் உட்பட அனைவருக்கும் எதிராகத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். உலகை ஏமாற்ற பெரிய போர் குற்றவாளி சிறிய போர்க்குற்றவாளிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இந்தத் தீர்மானத்தை நாம் ஆதரிக்க முடியாது.



மேலும் இலங்கை அரசு எந்த மாதிரியான போர்க்குற்றம் செய்ததோ அதே போன்ற போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் தான் விடுதலைப்புலிகள்.



யாழ்ப்பானம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். ஒரு முஸ்லிம் கூட அங்கே இல்லாதவகையில் துடைத்து எறிந்தனர்.



மேலும் கிழக்கு மாகான முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களுக்குள் புகுந்து பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற மாபாவிகள் தான் விடுதலைப் புலிகள்.



நாங்கள் இலங்கை சென்றிருந்த போது கொழும்பில் இருந்து புறப்பட இருந்த நாளில் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தார்களே அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் தான். அரை  மணி நேரம் நாங்கள் முன்னதாகச்சென்றிருந்தால் அந்தப் பட்டியலில் நாங்களும் இடம் பெற்றிருப்போம்.



கணக்கெடுத்துப் பார்த்தால் ராஜபக்சேயை விட அதிகமான அப்பாவிகளைக் கொன்றவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களை ஆதரிப்பவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் வேண்டும். அப்படி இருந்தால் தான் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் நேர்மையானதாக இருக்க முடியும்.



புலிகள் ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடிகிறது என்பதை நியாயமான பார்வை உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.



எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உலக முஸ்லிம் சமுதாயத்தால் மறக்க முடியாத விடுதலைப் புலிகளின் வெறியாட்டக் காட்சிகளில் சில.



































காத்தாங்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது புலி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறுவர்கள் முதியவர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ராஜ பக்சேய்யைவிட படு பயங்கரமான குற்றத்துக்கு இவை சாட்சிகள். ராஜ பக்ச்சே கோவிலுக்குள் அல்லது சர்ச்சுக்குள் புலிகள்நடத்தியது போன்ற பயங்கரவாதத்தை நிகழ்த்தியதில்லை .


-ஆன்லைன் பிஜே