வாராந்திர நிகழ்ச்சி - 14-10-2011
அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம்
வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான்
நிகழ்ச்சி 14-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.
இதில் சகோ. ஜெய்லானி அவர்கள் "துஆக்களின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்த
உரையில் அல்லாஹ் தனது திருமறையில் துஆக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள
பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்கள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி அழகிய முறையில் விளக்கினார்கள்.
இவர் நமது மண்டலத்தில் நடைபெற்ற தாயீ பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!






